மேடையிலே உதயநிதியிடம் நேரிடையாக அதிருப்தி தெரிவித்த ஒலிம்பிக் சாம்பியன் … சலசலப்பு ..

மேடையிலே உதயநிதியிடம் நேரிடையாக அதிருப்தி தெரிவித்த ஒலிம்பிக் சாம்பியன் … சலசலப்பு ..

சென்னை;

சென்னையில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்ட நிகழ்ச்சியில், ஹாக்கி உலகக் கோப்பையில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மேடையில் இடம் அளிக்கப்படாததால் சலசலப்பு ஏற்பட்டது.

உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வருகிற ஜனவரி மாதம் 13ம் தேதி ஒடிஷாவில் நடைபெறவுள்ள நிலையில் ஹாக்கி சாம்பியன் கோப்பையை அறிமுகம் செய்யும் விழா எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்றது. விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

அப்போது, உலகக் கோப்பையில் பதக்கம் வென்ற தமிழக ஹாக்கி வீரர்களுக்கு விழா மேடையில் இடம் வழங்கப்படாமல் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மட்டுமே இடம் கொடுக்கப்பட்டதாக ஒலிம்பிக் சாம்பியன் பாஸ்கரன் அமைச்சர் உதயநிதியிடம் அதிருப்தி தெரிவித்தார்.

இதனால் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது.அதன் பிறகு அவர்களுக்கு விழா மேடையின் முதல் வரிசையில் ஹாக்கி வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டது. பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காது என உறுதியளித்தார்.

Leave a Reply