“நீங்க வீட்டில இருந்து வெளியே வரும் போது கால் இருக்காது… தமிழக அமைச்சருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த சசிகலா புஷ்பா…

“நீங்க வீட்டில இருந்து வெளியே வரும் போது கால் இருக்காது… தமிழக  அமைச்சருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த சசிகலா புஷ்பா…

தூத்துக்குடி;

தூத்துக்குடியில், பாஜக தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழா, மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியார் மண்டபத்தில் (டிச. 22) நடைபெற்றது.

இதில், சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன். பால கணபதி ஆகியோர் கலந்து கொண்டு ஏழை, எளிய கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் பெண்களுக்கு தையல் மிஷின், மற்றும் சேலைகளை வழங்கினர். 

நிகழ்வில் சசிகலா புஷ்பா பேசும்போது,”தலைவர் அண்ணாமலை 24 மணி நேரமும் உழைத்து கொண்டிருப்பவர் , மக்களுக்காக உழைக்கும் அவரை பற்றி பேச தகுதி இல்லை. மரியாதையாக பேச சொல்லி கொடுத்த பண்பு உள்ள கட்சி பாஜக, ஒருமையில் பேசும் பழக்கம் பாஜகவிற்கு இல்லை” என்றார். 

அண்ணாமலை மேடையில் ஏறும் போது நாங்கள் மேடையில் ஏறுவோம் என  பொது கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசியிருந்தார். அதற்கு பதிலடி அளிக்கும் வகையில், ஆவேசமாக பேசிய சசிகலா புஷ்பா, “நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது கால் இருக்காது, நாக்கு இருக்காது” என்றார். 

 பாஜகவினருக்கும், திமுகவினருக்கும் சமூக வலைதளத்தில், களத்திலும் பலத்த கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. அதே வகையில்தான், முன்னாள் அதிமுக அமைச்சராக இருந்து, பாஜகவுக்கு மாறிய சசிகலா புஷ்பாவுக்கும், தற்போதைய அமைச்சர் கீதாஜீவனுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply