என் ஜாதகம் மோசமான ஜாதகம் ………. என் ராசி வித்தியாசமானது… விளக்கம் கொடுத்த ஆர்.எஸ் பாரதி…

சென்னை;
மறைந்த திமுக முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது.
இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டு நூற்றாண்டு விழா சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது டான்சி நிலத்தை வாங்கியதில் மாட்டிக்கொண்டு சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
அதே மாதிரிதான் இன்றைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரபேல் வாட்ச் வாங்கி தற்போது மாட்டி உள்ளார்.
என் ஜாதகம் மோசமான ஜாதகம். நான் புகார் அளித்தால் ஒன்று சிறைக்கு சென்று விடுவார், அல்லது அரசிலை விட்டு விலகி விடுவார், அல்லது பாதியில் மேலே சென்று விடுவார், அப்படி ஒரு வித்தியாசமான ராசி.
இதில் அண்ணாமலை தற்போது மாட்டி உள்ளதாக ஆர்.எஸ் பாரதி தெரிவித்தார்.