உதயநிதியை காக்கா பிடிக்க ஒரு தமிழக அமைச்சர் தெருக்களுக்கு உதயநிதி பெயரை வைத்து வருகிறார்…விமர்சித்த செல்லூர் ராஜூ…

உதயநிதியை காக்கா பிடிக்க ஒரு தமிழக அமைச்சர்  தெருக்களுக்கு உதயநிதி  பெயரை வைத்து வருகிறார்…விமர்சித்த செல்லூர் ராஜூ…

மதுரை ;

மதுரை மேற்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பரவை பகுதியில் புதிய குளியல் தொட்டி,  சுகாதார வளாகம், மின் மோட்டார் அமைப்பதற்கான பூமி பூஜை, சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சரும், அப்பகுதியின் எம்.எல்.ஏ.,வுமான செல்லூர் கே.ராஜூ துவக்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,  கொரானா பாதிப்பு ஏற்பட்டுவரும் நிலையில் அதிமுக ஆட்சி காலத்திலேயே எல்லா பணிகளையும் செய்து முடித்துவிட்டோம். தற்போது கட்டிய வீட்டில் தி.மு.க., அரசு குடியேறியுள்ளது.

எனவே கொரோனா தொடர்பான பிரச்னையை ஏற்கனவே வைத்துள்ள உபகரணங்கள் படுக்கை வசதி உள்ளிட்டவைகளை வைத்து முறையாக கவனித்தால் போதும் என தெரிவித்தார். 

கலைஞர் கதை வசனம் எழுதினார், ஸ்டாலின் நன்றாக பேசுகிறார். ஆனால் நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

உதயநிதி ஸ்டாலினை காக்கா பிடிக்க செந்தில் பாலாஜி தெருக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரை வைத்து வருகிறார்.என செல்லூர் ராஜூ விமர்சித்தார்.

Leave a Reply