மொதல்ல பாமக …அப்புறம் தேமுதிக.. இப்ப ஓபிஎஸ் அணி…. ஓபிஎஸ் ச கவிழ்க்க இந்த பண்ருட்டியார் ஒருவரே போதும்… முன்னாள் அதிமுக அமைச்சர் பேச்சு …

மொதல்ல பாமக …அப்புறம் தேமுதிக.. இப்ப ஓபிஎஸ் அணி…. ஓபிஎஸ் ச  கவிழ்க்க இந்த பண்ருட்டியார் ஒருவரே போதும்… முன்னாள் அதிமுக அமைச்சர் பேச்சு …

மன்னார்குடி;

மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு துரோகம் செய்த பண்ருட்டி ராமச்சந்திரன், இன்று எம்ஜிஆர் உடைய கட்சியை காப்பாற்றுவதற்காக ஓ.பி.எஸ்.யிடம் ஒன்று சேர்ந்துள்ளோம்  என்று சொல்கிறார் என முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு,பால் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் தமிழக அரசை  கண்டித்து கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகர  அதிமுக சார்பில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ்,

“ஓ.பன்னீர்செல்வத்திற்கு இன்று ஆலோசகராக இருக்கின்ற பண்ருட்டி ராமச்சந்திரன் ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சியில் சட்டமன்ற உறுப்பினராகவும் அதன்பிறகு தேமுதிகவிற்கு சென்று சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

அப்போதெல்லாம் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை இவருக்கு தெரியவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர்கள்   எம்ஜிஆர், ஜெயலலிதாஆகியோருக்கு துரோகம் செய்த அவர், இன்றைக்கு எம்ஜிஆர் உடைய கட்சியை காப்பாற்றுவதற்காக ஓ.பி.எஸ்.யிடம் ஒன்று சேர்ந்துள்ளோம் என்று  சொல்கிறார்.

இவர் ஒருவரே ஓபிஎஸ் அணியை கவிழ்ப்பதற்கு போதும்” என  தெரிவித்தார்

Leave a Reply