20 ஓவர் முதல் போட்டி வருகிற ஜனவரி 3-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது!!

20 ஓவர் முதல் போட்டி வருகிற ஜனவரி  3-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது!!

மும்பை:

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் 20 ஓவர் போட்டி வருகிற ஜனவரி 3-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வங்காள தேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரின்போது இடது கை விரலில் காயம் அடைந்தார். அவர் காயத்தில் இருந்து குணமடைய சில நாட்கள் ஆகலாம் என்று தெரிகிறது.

இதனால் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் இந்தியாவின் 20 ஓவர் கேப்டன்ஷிப் பற்றி விவாதிக்கப்படவில்லை. தேர்வுக்குழு மட்டுமே கேப்டன் பதவி பற்றி முடிவு எடுக்க முடியும் என்றார்.

இலங்கைக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா காயத்தில் இருந்து குணமடையாவிட்டால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படவே அதிக வாய்ப்பு உள்ளது.

கடந்த ஐ.பி.எல். போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply