தமிழக அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் .. சூறையாடப்பட்ட சசிகலா புஷ்பா வீடு… கார் உடைப்பு… போலீசார் தீவிர விசாரணை ..

தமிழக அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் .. சூறையாடப்பட்ட  சசிகலா புஷ்பா வீடு… கார் உடைப்பு… போலீசார் தீவிர விசாரணை ..

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சி முன்னாள் மேயரும், , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் கண்ணாடி ஆகியவற்றை மர்ம நபர்கள் இன்று அடித்துச் சேதப்படுத்தி உள்ளது பாஜகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடியில் நேற்று பாஜக தெற்கு மாவட்டம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இவ்விழாவில், திமுக அமைச்சரை குறித்து சசிகலா புஷ்பா மிரட்டலாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், அவரது வீட்டு கதவு, ஜன்னல் கண்ணாடிகள், பூந்தொட்டிகள், கார் கண்ணாடி ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிப்காட் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று பாஜக சார்பில் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட உதவிகள் வழக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜூவன், தனது தலைவர் அண்ணாமலை-யை அவதூறாக பேசினால் வெளியில் வர கால்கள் இருக்காது பேச நாக்குஇருக்காது என்று எச்சரிக்கை விடுத்து பேசியதால் திமுக-வினர் தாக்குதல் நடத்தி உள்ளதாக பாஜகவினர் குற்றசாட்டி உள்ளனர்.

Leave a Reply