நானும் கிறிஸ்தவன் தான்.. கிறிஸ்தவன் என சொல்வதில் பெருமை கொள்கிறேன்… உதயநிதி ஓபன் டாக் …

சென்னை ;
சென்னை துறைமுகம் தொகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன? சொல்றேன் கேளுங்க.. ஒரு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ’அல்லேலுயா’ என சொல்லி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் எப்போதுமே மாலையும் கழுத்துடன் தான் இருப்பார் ஆனால் அவர் கிறிஸ்தவ நிகழ்ச்சிக்கும் செல்வார். இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கும் செல்வார். இதுதான் சமூக நிதி ஆட்சி. இதுதான் பெரியார், கலைஞர் கற்றுக்கொடுத்தது.
இன்னும் சொல்ல போனால் நானும் கிறிஸ்தவன் தான். கிறிஸ்தவன் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். சேகர்பாபு அல்லேலுயானு சொல்றாரு. உதயநிதி ஸ்டாலின் போய்ட்டு கிறிஸ்தவனு சொல்றாருனு இன்று எல்லாருக்கும் எரியும்.
நான் எழும்பூரில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில்தான் படித்தேன். லயோலா கல்லூரியில்தான் படித்தேன். நான் காதலித்து மணந்தது ஒரு கிறிஸ்தவ பெண் . கடந்த 4 நாட்களாக பத்திரிக்கையாளர்களுக்கு நான் தான் தீனியாகி கொண்டிருக்கிறேன். என தெரிவித்தார்.