விஜய்யின் ”வாரிசு” பட புதிய போஸ்டர்!!

விஜய்யின் ”வாரிசு” பட புதிய போஸ்டர்!!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தொடர்ந்து ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்தின் ‘ரஞ்சிதமே’ மற்றும் ‘தீ தளபதி’, ‘சோல் ஆஃப் வாரிசு’ பாடகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.

‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற நாளை 24-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று படக்குழு நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது.

இசை வெளியீட்டு விழாவிற்காக மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை இசையமைப்பாளர் தமன் நேரில் சென்று பார்வையிட்டு இதன் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply