திருச்செந்தூரின் முருகன் கோவிலில் மனமுருக  வழிபட்ட வைகோ மகன் துரை…

திருச்செந்தூரின் முருகன் கோவிலில் மனமுருக  வழிபட்ட வைகோ மகன் துரை…

தூத்துக்குடி:

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்ற மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, அங்கு பின்பற்றப்படும் விதிமுறையை முழுமையாக கடைபிடுத்து வழிபாடு நடத்தியுள்ளார்.

1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு போக வேண்டும் என்று தாம் விருப்பப்பட்டதன் பேரில் மாவட்டச் செயலாளர் தன்னை அங்கு அழைத்துச் சென்றதாக கூறியிருக்கிறார்.

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வந்தது குறித்து துரை வைகோ தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

”தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருச்செந்துார் நகரில் 21.12.2022 காலை மாமனிதன் வைகோ ஆவணப்படத்தை வெளியிட்டுவிட்டு புறப்படும் போது, மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் புதுக்கோட்டை செல்வம் அவர்களிடம், 1200 ஆண்டுகள் பழைமையான செந்தில் ஆண்டவர் திருக்கோவிலுக்கு செல்லவேண்டும் என விருப்பம் தெரிவித்தேன்.

அதைத்தொடர்ந்து அங்கு பின்பற்றப்படும் விதிமுறைப்படி கோவிலுக்குள் சென்று திருமுருகனை வழிபட்டேன்.” ஆறுபடை வீடுகளில் ஒரு படை வீடான திருச்செந்தூர் திருமுருகன் திருக்கோவில் மட்டும் தான் கடற்கரையின் மீது அமைந்துள்ளது என்பது இதன் தனிச்சிறப்பாகும்.”

”பல லட்சம் பக்தர்கள் நம்பிக்கையில் வந்து வழிபடும் இத்திருத் தலத்திற்கு வந்து திருமுருகக் கடவுளை வழிபட்டுச்செல்ல கிடைத்த வாய்ப்பினை நினைத்து மகிழ்ந்தேன்.”

இவ்வாறு மதிமுக தலைமைக்கழகச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply