”பயந்துட்டியா.. மல” கோவை எங்கும் திமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு …

கோவை;
பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. விவசாய குடும்பத்தில் பிறந்தவன் எனக் கூறும் அண்ணாமலை 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரபேல் வாட்ச்சை வாங்கியது எப்படி என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
ஆனால் இதற்கு அண்ணாமலை நேரடியாக பதில் அளிக்காமல் ஏப்ரல் மாதம் இதற்கான பில்லை கொடுக்கிறேன். அத்துடன் சேர்த்து அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் சமர்ப்பிக்கிறேன் எனக் கூறி இருந்தார் .
இதற்கு செந்தில் பாலாஜி, பில் இருக்கிறதா? இல்லையா? என டிவிட்டரில் காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் ரபேல் இந்தியாவை பாதுகாக்கும்.. இந்த ரபேல் வாட்ச் திமுகவை அழிக்கும் என அண்ணாமலை பதில் அளித்திருந்தார் .
இந்த சூழலில் கோவையில் ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டர் அண்ணாமலைக்கு மேலும் நெருக்கடியை கொடுத்துள்ளது. கோவை முழுவதும் “டிக்..டிக்..டிக்.. பயந்துட்டியா.. மல” என்ற வாசகத்துடன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கரூர் பாலாஜி உள்ளிட்டோரின் புகைப்படங்களுடன் திமுகவினரால் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது..