இந்த ஐந்து நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய கொரானா பரிசோதனை … மத்திய சுகாதாரத்துறை உத்தரவு…

இந்த ஐந்து நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய கொரானா பரிசோதனை … மத்திய சுகாதாரத்துறை உத்தரவு…

டெல்லி;

சீனாவில் பரவி வரும் உருமாறிய பிஎஃப்.7 கொரோனா வைரஸ் உலக நாடுகள் மத்தியில் மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக டெல்லியில் பிரதமர்  தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று கொரோனா பரவல் தொடர்பாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.

ஏற்கனவே, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் இரண்டு சதவீதம் பேருக்கு, விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், அடுத்தகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதன்படி, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் பணிகள் அனைவரும் கட்டாயம் கொரோனா RT-PCR பரிசோதனை எடுக்க வேண்டும். சோதனை முடிவுகளில் பாதிப்பு உறுதியானால் கட்டாய தனிமையில் அவர்கள் வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அனைத்து தரவுகளும் Air Suvidha தளத்தில் பகிரப்பட்டு கண்காணிக்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  மேலும் நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தங்கள் ஆக்சிஜன் கையிருப்பை உறுதி செய்துகொள்ள மத்திய சுகாதராத்துறை வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.

Leave a Reply