கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் தான் இனி திருப்பதியில் அனுமதி …தேவஸ்தானம் அறிவிப்பு …

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் தான் இனி திருப்பதியில் அனுமதி …தேவஸ்தானம் அறிவிப்பு …

திருப்பதி;

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்பவர்களுக்கு இனி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் உலக பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினசரி வந்து செல்கின்றனர்.

அந்த வகையில் தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை விதிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய வகை கொரோனா அச்சுறுத்தலால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கொரோனா நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற தேவஸ்தான நிர்வாகம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பல அறிவிப்புகள் வெளியானது.

அதில், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை திருப்பதியில் சிறப்பு தரிசனம் செய்ய கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.300 கட்டண செலுத்தி சிறப்பு தரிசனம் செய்பவர்கள் 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழை பதிவு செய்யும் போது இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply