ரோடா இது …இப்படிதான் ரோடு போடுவீங்களா ? கடுப்பில் நடு ரோட்டில் தனது பைக்கை கொழுத்திய வியாபாரி…

கரிக்கலாம்பாக்கம்;
புதுச்சேரி அடுத்த கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தணிக்காசலம். கரிக்காலம்பாக்கம் சந்திப்பில் ஜூஸ்கடை நடத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கரிக்கலாம்பாக்கம்-ஏம்பலம் சாலையில் புதிய சாலை போடபட்டது. இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்து இருப்பதாகவும், சாலை சரியில்லை என்றும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி பொது பணித்துறை அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
இதன் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், அதை கண்டிக்கும் வகையில் கரிக்கலாம்பாக்கம் சந்திப்பில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி, அதை எரித்தார். மோட்டார் சைக்கிள் கொளுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்தவுடன் மங்கலம் போலீசார் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். பின்பு விசாரணைக்காக தணிக்காசலத்தை காவல்நிலையம் அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.