உடனடியாக துப்பாக்கியால் சுடுங்கள்… எந்த தயக்கமும் வேண்டாம் … போலீசாருக்கு தமிழக டிஜிபி ஆணை…

உடனடியாக  துப்பாக்கியால் சுடுங்கள்… எந்த தயக்கமும் வேண்டாம் … போலீசாருக்கு  தமிழக டிஜிபி ஆணை…

நெல்லை;

நெல்லை மாவட்டத்தில் காவல் அதிகாரிகளை தாக்கினால் துப்பாக்கியால் சுட தயங்கக்கூடாது என டிஜிபி சைலேந்திர பாபு ஆணை பிறப்பித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“தமிழகத்தில் 3.0 கஞ்சா வேட்டை நடைபெற்றுவருகிறது. கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு திட்டமிட்டு 4 முறை ஆலோசனை நடத்தி அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தல் வழக்கில் இதுவரை 9,207 வழக்குகள், சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

23 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4,003 பேரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடியில் கஞ்சா பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லையில் பல ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளன.

நெல்லையில் பழிக்குப்பழியாக நடத்தப்படும் கொலை, சாதிய ரீதியிலான மோதல் ஆகியவற்றை தடுக்க 3 அடுக்குகளை கொண்ட குழு மற்றும் தனிப்பிரிவு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களும் இங்கு அரங்கேறியுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க குற்றவாளிகள் தாக்கினால் காவல் அதிகாரிகள் துப்பாக்கியால் சுட எந்த தயக்கமும் காட்ட வேண்டாம்.

வீர மரணமடைந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்துவருகிறோம். தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கு 2 பைக் வழங்கப்பட்டுள்ளது. நகைப்பறிப்பு, பைதிருட்டு உள்ளிட்டவற்றை தடுக்க போலீசார் பைக்கில் 24 மணிநேரமும் ரோந்து சென்று கண்காணிப்பர்” எனக் கூறினார். 

Leave a Reply