இந்துக்கள் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்க மாட்டாராம் .. ஆனால் மதசார்பற்ற அரசு என்று கூறிக்கொள்வாராம் … தமிழக முதல்வர் நிலைப்பாடு குறித்து ஆளுனர் தமிழிசை பேச்சு…

புதுச்சேரி:
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில்,
வரும் புதிய ஆண்டு கொரோனா இல்லாத ஆண்டாக இருக்க வேண்டும். வரும் புதன்கிழமையில் இருந்து உருமாறிய கொரோனாவை கண்டறியும் மையம் அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட உள்ளது. மேலும் கூட்டமாக இருக்கும் இடங்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும்.
அனைத்து வகையிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதையும் எதிர்கொள்ள புதுச்சேரி அரசு தயாராக உள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்களில் மிக கவனமாக முகக்கவசம் அணிய வேண்டும் . புத்தாண்டு கொண்டாட்டங்களில் எந்தவித கட்டுப்பாடுகள் இல்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, நாங்கள் வேறு மத நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும், அதிகாரத்தில் இருப்பதால் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை மனமார தெரிவித்து கொள்கிறோம்.
ஆனால் நான் சார்ந்து இருக்கும் தமிழகத்தின் முதலமைச்சர் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்க மறுக்கிறார் என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது. மத எல்லைகளை கடந்து வாழ்த்துகளை பகிர வேண்டும். அதுதான் மதசார்பற்றது என்று தெரிவித்தார்.