வயல் ல கரும்பு இருக்கு…மார்க்கெட்ல கரும்பு இருக்கு… அப்புறம் என்ன? பொங்கல் பரிசில் கரும்பு இல்லையா? என்ற கேள்விக்கு தமிழக அமைச்சர் கிண்டல் பதில்….

வயல் ல கரும்பு இருக்கு…மார்க்கெட்ல கரும்பு இருக்கு… அப்புறம் என்ன? பொங்கல் பரிசில் கரும்பு இல்லையா? என்ற கேள்விக்கு தமிழக அமைச்சர் கிண்டல் பதில்….

சென்னை :

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் இந்தாண்டு 1000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கரும்பையும் சேர்த்து வழங்கக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் பொங்கல் தொகுப்பில் கரும்பு இல்லை எனக் கூறி விவசாயிகள் சில இடங்களில் போராட்டம் நடத்துகிறார்களே… என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன்,” ”கரும்பு மார்க்கெட்டில் இருக்கிறது, வயலில் இருக்கிறது, கரும்பு எங்கும் இருக்கிறது,” அப்புறம் என்ன என, அமைச்சர் துரைமுருகன் கிண்டலாக பதில் கூறினார்.


Leave a Reply