(27-12-2022 முதல் 2-1-2023 வரை ) இந்த வார விசேஷங்கள்!!

(27-12-2022 முதல் 2-1-2023 வரை ) இந்த வார விசேஷங்கள்!!

27-ந் தேதி (செவ்வாய்)

  • ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார், காளிங்க நர்த்தனக் காட்சி.
  • சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
  • ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் உற்சவம் ஆரம்பம், வெள்ளிப் பல்லக்கில் பவனி.
  • மேல்நோக்கு நாள்.
  • சந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம்

28-ந் தேதி (புதன்)

  • பிள்ளையார் நோன்பு.
  • திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் யோகாம்பிகை திருக்கோலம்.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், பரமபத நாதன் திருக்கோலம்.
  • மேல்நோக்கு நாள்.
  • சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம்

29-ந் தேதி (வியாழன்)

  • திருக்குற்றாலம் குற்றாலநாதர் வெள்ளிச் சப்பரத்தில் புறப்பாடு.
  • ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் கஜேந்திர மோட்சம்.
  • ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர், முதலமைச்சர் திருக்கோலம்.
  • கீழ்நோக்கு நாள்.
  • சந்திராஷ்டமம் : ஆயில்யம், மகம்

30-ந் தேதி (வெள்ளி)

  • சங்கரன்கோவில் சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், பட்டாபிராமர் திருக்கோலம்.
  • ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர், திரிபுர சம்ஹார லீலை, இரவு கயிலாச பர்வத வாகனத்தில் உலா.
  • சிதம்பரம் சிவபெருமான் காலை தங்க சூரிய பிரபையில் புறப்பாடு.
  • மேல்நோக்கு நாள்.
  • சந்திராஷ்டமம் : மகம், பூரம்

31-ந் தேதி (சனி)

  • திருநெல்வேலி நெல்லையப்பர் மற்றும் காந்திமதியம்மாள், ரிஷப வாகனத்தில் உலா.
  • திருப்பெருந்துறை மாணிக்கவாசகர், காலை வெள்ளிப் பல்லக்கில் பவனி.
  • சமநோக்கு நாள்.
  • சந்திராஷ்டமம் : பூரம், உத்திரம்

1-ந் தேதி (ஞாயிறு)

  • ஆங்கிலப் புத்தாண்டு.
  • ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர், ஊர்த்துவ தாண்டவம், இரவு வெள்ளி யானை வாகனத்தில் பவனி.
  • திருக்குற்றாலம் குற்றாலநாதர் ஆலயத்தில் பஞ்சமூர்த்திகளுடன் ரத உற்சவம்.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், நாச்சியார் திருக்கோலம்.
  • சமநோக்கு நாள்.
  • சந்திராஷ்டமம் : உத்திரம், ஹஸ்தம்

2-ந் தேதி (திங்கள்)

  • வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு.
  • திருப்பெருந்துறை மாணிக்கவாசகர், காலை ருத்ராட்ச விமானத்தில் பவனி.
  • திருப்போரூர் முருகப்பெருமான் பால் அபிஷேகம்.
  • கீழ்நோக்கு நாள்.
  • சந்திராஷ்டமம் : ஹஸ்தம், சித்திரை
    …..

Leave a Reply