வயிற்றுப் பூச்சிகளை நீக்குவது மட்டுமல்லாமல் மலச்சிக்கலைப் போக்கி பசியை தூண்டும் நாகமல்லி மூலிகை !

வயிற்றுப் பூச்சிகளை நீக்குவது மட்டுமல்லாமல் மலச்சிக்கலைப் போக்கி பசியை தூண்டும் நாகமல்லி மூலிகை !

வெள்ளை நிறத்தில் பூக்களையும், கனகா மர செடியின் இலைகளை போல இலைகளையும் கொண்டது தான் நாகமல்லி மூலிகை.


இது பரவலாக இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. இது காடு, புதர்கள் போன்ற இடங்களில் அதிகமாக காணப்படுகிறது.


இதன் இலை, வேர், பூ என அனைத்து பகுதிகளும் மருத்துவப் பயன் கொண்டது. இது கண்நோய், வண்டு கடி, தேள் கடி, நாள்பட்ட தோல் நோய் போன்றவை குணமாகும்.
பழங்காலம் முதலே சித்தர்கள் பயன்படுத்தி வந்த மூலிகைகளில் ஒன்று தான் நாகமல்லி . இதன் மருத்துவ நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


நாகமல்லியின் வேர், விதை போன்றவற்றை எலுமிச்சம் பழச் சாறு விட்டு அரைத்து கரப்பான், படர்தாமரை மற்றும் அக்கிள் போன்ற இடங்களில் ஏற்படும் அரிப்பு போன்ற நோய்களுக்கு இதனை அரைத்து வெளிப்பூச்சாக பூசி வந்தால் எளிதில் குணமடையும்.


பாம்பின் பெயரை கொண்டு தொடங்கும் இந்த மூலிகையை விஷப் பாம்பு கடித்து விட்டால் இதன் இலையை மென்று சாற்றை குடித்து வந்தால் விஷம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும்.


மூட்டு வலி பிரச்னை உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து மூட்டின் மேல் பூசிவந்தால் மூட்டு வலி நீங்கும்.


நாகமல்லி மூலிகை வயிற்றுப் பூச்சிகளை நீக்குவது மட்டுமல்லாமல் மலச்சிக்கலைப் போக்கி பசியை தூண்டி விடுகிறது.


நாகமல்லியின் வேரினை நிழலில் காயவைத்து அதனை பொடிசெய்து பாலில் கலந்து கொதிக்க வைத்து தூங்க செல்லும் செல்லும் முன் அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும்.


நாம் அனுதினமும் சாப்பிடும் உணவுகளில் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் இருக்கின்றன. இந்த உணவுகளை நாம் சாப்பிடும் போது இதில் இருக்கும் பூச்சிகள் நம் வயிற்றில் வளர ஆரம்பிக்கின்றன.


உண்ணும் உணவில் உள்ள ஊட்டச் சத்துக்களை உறிஞ்சி வயிற்றில் புண்களை ஏற்படுத்துகின்றன. இதை போக்க நாகமல்லியின் இலையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிய நீரை அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

Leave a Reply