கிறிஸ்துமஸ் பண்டிகையை குடித்தே கொண்டாடிய கேரள சேட்டன்கள்… அன்றையதினம் ரூ.230 கோடிக்கு மது விற்பனை…

திருவனந்தபுரம்,
இந்த ஆண்டு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடந்த23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ரூ.230 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக கேரள மதுபான கழகம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை கேரளாவில் கூடிகொண்டே போகிறது. தற்போது நடந்த உலககோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தின் போதும் ஐம்பது கோடிக்கும் மேல் மது விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது . அந்த வகையில் தற்போது கிறிஸ்துமஸ் தினத்தை குடித்தே கொண்டாடி உள்ளனர் கேரளா சேட்டன்கள்.
கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை சமயத்தில் ரூ.90 கோடிக்கு மட்டுமே மது விற்பனையாகி இருந்தது.