‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் டீசர் இரண்டு நாட்களில் 20 லட்சம் பார்வை யாளர்களை கடந்து சாதனை !!

‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் டீசர் இரண்டு நாட்களில் 20 லட்சம் பார்வை யாளர்களை கடந்து சாதனை !!

பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் நடித்துள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் டீசர் இரண்டு நாட்களில் 20 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை நடிகர் சேரன் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். மேலும், “2 நாட்களில் 20 லட்சம் மக்கள் பார்த்திருக்கிறார்கள்… இன்னும் 20 லட்சம் மக்களிடம் சொல்வதற்கான செய்தி உள்ள டீஸர் என்பது அவர்கள் பார்த்த வேகத்தில் தெரிகிறது.. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவேண்டியது நம் கடமை…” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply