கலெக்டர் ஆபீஸ் நுழைவு வாயிலில், பெயர் பலகையை மறைத்து தமிழக அமைச்சரின் பேனர் வைத்த திமுகவினர்… பொதுமக்கள் அதிர்ச்சி…

விருதுநகர் ;

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.இராமச்சந்திரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை புரியும் அமைச்சர்களை வரவேற்பதற்காக டிஜிட்டல் பேனர்கள் மற்றும் கொடிகளை வழி நெடுகிலும் வைத்திருந்தனர்.

ஆனால் அமைச்சரிடம் நல்ல பெயர் வாங்கிக் கொள்வதற்காக மாவட்ட ஆட்சியரின் அலுவலக நுழைவு வாயிலில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக பெயர் பலகையை மறைத்து டிஜிட்டல் பேனர் வைத்திருந்தனர். இதனால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் , அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அமைச்சரிடம் நல்ல பெயர் வாங்குவதற்கு அமைச்சரின் கண்ணில் படும்படியாக இருக்க வேண்டுமாம். அதனால், டிஜிட்டல் பேனர் வைத்தார்களாம் என திமுக கட்சியினரே சிலர் பேசிக்கொண்டது அதிர்ச்சி அடைய வைத்தது .

அது மட்டுமின்றி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கு பெற வந்த பெண்கள் அரங்கிற்கு வெளியில் தரையில்அமர வைத்து காக்க வைக்க பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .

விருதுநகர் ;

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.இராமச்சந்திரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை புரியும் அமைச்சர்களை வரவேற்பதற்காக டிஜிட்டல் பேனர்கள் மற்றும் கொடிகளை வழி நெடுகிலும் வைத்திருந்தனர்.

ஆனால் அமைச்சரிடம் நல்ல பெயர் வாங்கிக் கொள்வதற்காக மாவட்ட ஆட்சியரின் அலுவலக நுழைவு வாயிலில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக பெயர் பலகையை மறைத்து டிஜிட்டல் பேனர் வைத்திருந்தனர். இதனால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் , அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அமைச்சரிடம் நல்ல பெயர் வாங்குவதற்கு அமைச்சரின் கண்ணில் படும்படியாக இருக்க வேண்டுமாம். அதனால், டிஜிட்டல் பேனர் வைத்தார்களாம் என திமுக கட்சியினரே சிலர் பேசிக்கொண்டது அதிர்ச்சி அடைய வைத்தது .

அது மட்டுமின்றி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கு பெற வந்த பெண்கள் அரங்கிற்கு வெளியில் தரையில் அமரவைத்து காக்க வைக்கபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply