சுமார் 3 லட்சருபாய் மின்கட்டண பாக்கி .. போலீஸ் குவார்டர்சின்  ”ஃப்யூசை” பிடுங்கிய மின்வாரிய அதிகாரிகள் … 8 மணி நேரம் தவித்த போலீஸ் குடும்பத்தார் …

சுமார் 3 லட்சருபாய் மின்கட்டண பாக்கி .. போலீஸ் குவார்டர்சின்  ”ஃப்யூசை” பிடுங்கிய மின்வாரிய அதிகாரிகள் …       8 மணி நேரம் தவித்த போலீஸ் குடும்பத்தார் …

சென்னை:

லட்சக்கணக்கில் கரண்ட் பில் கட்டாததால் ஆவடியில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ள ஃப்யூஸை மின்வாரிய அதிகாரிகள் பிடுங்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடியில் உள்ள எஸ்எம் நகரில் தமிழக காவல் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், கடந்த மாத மின்சாரக் கட்டணமான ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் செலுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, நிலுவையில் உள்ள இந்த மின் கட்டணத்தை செலுத்தக் கோரி, பல முறை மின்சார வாரியம் சார்பில் காவலர் குடியிருப்புக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. ஆனால், மின் கட்டணம் செலுத்தப்படவில்லை.

இந்நிலையில், நேற்று அங்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் காவலர் குடியிருப்பின் பொது ஃப்யூஸை எடுக்க முற்பட்டனர். அப்போது அங்கிருந்த போலீஸார், மின்வாரிய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மின்வாரிய அதிகாரிகள்,  எல்லோருக்கும் ரூல்ஸ் ஒன்றுதான்” எனக் கூறி ஃப்யூஸை எடுத்துச் சென்றனர்.

இதனால் சுமார் 8 மணிநேரத்துக்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் போலீஸாரும், அவர்களின் குடும்பத்தினரும் அவதிப்பட்டனர்.

பின்னர், மின் கட்டணம் செலுத்தப்பட்டதை அடுத்து, காவலர் குடியிருப்புக்கு மின் இணைப்பு மீண்டும் கொடுக்கப்பட்டது.

Leave a Reply