விடியா அரசு என்று திமுகவை எடப்பாடிசொல்லாமல் இருக்கனுமா … இத செய்யுங்க போதும் … வழிசொன்ன ஓபிஎஸ்ஆதரவாளர் …

விடியா அரசு என்று திமுகவை எடப்பாடிசொல்லாமல் இருக்கனுமா … இத செய்யுங்க போதும் … வழிசொன்ன ஓபிஎஸ்ஆதரவாளர் …

சென்னை:

மூத்த தலைவரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி, 2 முக்கிய விஷயங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் புகழேந்தி, கொடநாடு, மற்றும் ஊழல் புகார்கள் குறித்தும் திமுக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த 2 வருடங்களாகவே, கொடநாடு வழக்கு குறித்து எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார் புகழேந்தி..

நேற்றைய தினம், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ;,

பொதுச்செயலாளர் பதவிக்கு பேராசைப்பட்டு, எடப்பாடி எங்களுடன் தகராறு செய்து கட்சியை சிதைக்க வேண்டும் என்று நினைக்கிறார்.. அது கனவிலும் நடக்காது.. எம்ஜிஆர் கொண்டு வந்த சட்டத்திட்டத்தின்படி, தொண்டர்கள்தான் ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்துள்ளனர்.

அந்தவகையில், ஓபிஎஸ் சரியான பாதையில் செல்கிறார். இந்த எடப்பாடி பழனிசாமி ஒரு துரோகி.. மகுடம் சூட்ட முடியாது.. எழுதி வைத்துக் கொள்ளுங்கள், ஓபிஎஸ்தான் மகுடம் சூட்ட போகிறார்.

ஒரு ரகசியம் சொல்றேன் கேளுங்கள், யாருக்குமே தெரியாத ரகசியம் அது.. எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள, நான்கைந்து மாவட்ட செயலாளர்கள், எங்ககிட்ட வரப்போறாங்க. அந்த தகவல் கன்பார்மும் ஆகியிடுச்சு.

எடப்பாடி தரப்பினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில், எங்களிடம் ஆதாரம் இருக்கு என்று அரசு வழக்கறிஞர் உறுதியாக சொல்கிறார். அப்பறம் ஏன் சும்மா இருக்க வேண்டும்?

இந்த பழனிசாமியை கொஞ்ச நாள் உள்ளே போடுங்க சார்.. எல்லா உண்மையும் வெளியே வரும்.. மக்களுக்கும் உண்மை தெரியட்டும்.. அதிமுகவும் காப்பாற்றப்படும்.. விடியா அரசு என்று திமுகவை சொல்லி கொண்டிருக்கிறாரே, அதுவும் நிறுத்தப்பட்டுவிடும்” என்றார் புகழேந்தி.

Leave a Reply