மோகன்லாலுடன் மீண்டும் இணையும் கமல்ஹாசன்?

மலையாளத்தில் முன்னணி நடிகரான மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் ‘மான்ஸ்டர்’ திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது இவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் இது குறித்து படக்குழு அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2009-ஆம் ஆண்டு ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படத்தில் நடிகர் மோகன்லால், கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.