இருசக்கர வாகனத்தில் ராஷ்மிகாவை துரத்தி வந்த ரசிகர்கள்!!

இருசக்கர வாகனத்தில் ராஷ்மிகாவை துரத்தி வந்த ரசிகர்கள்!!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முடித்து விட்டு ராஷ்மிகா தன் காரில் புறப்பட்ட போது அவரை சில ரசிகர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தனர். ரசிகர்களைப் பார்த்த ராஷ்மிகா காரை நிறுத்தச் சொல்லி, “ஹெல்மெட் போட்டுக்கோங்க…” என அறிவுரைச் கூறிவிட்டு கிளம்பினார்.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் ராஷ்மிகா தங்கள் இதயத்தை வென்றதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply