பிரதமர் மோடியின் தாய்க்கு உடல்நல குறைவு …மருத்துவமனையில் அனுமதி..

பிரதமர் மோடியின் தாய்க்கு உடல்நல குறைவு …மருத்துவமனையில் அனுமதி..

அகமதாபாத்;

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபென் மோடி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹிராபென் மோடிக்கு தற்போது 100 வயதாகிறது. இம் மாதம் நடந்த குஜராத் சட்டசபைத் தேர்தலில் கூட ஹிராபென் மோடி சர்க்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஹிராபென் மோடிக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா  மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று ஹிராபென் மோடி அனுமதிக்கப்பட்டார்.

 இந்த தகவல் அறிந்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், தலைமைச் செயலாளர் கைலாசநாதன் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்றனர்.

 யுஎன் மேத்தா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் “ பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி யுஎன் மேத்தா இதயநோய் மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply