வெற்றி பெற எதையும் செய்வார்கள்.. தயாராக இருங்கள்…. திமுகவினருக்கு முதல்வர் அறிவுறுத்தல்…

வெற்றி பெற எதையும் செய்வார்கள்.. தயாராக இருங்கள்…. திமுகவினருக்கு முதல்வர் அறிவுறுத்தல்…

சென்னை;

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற எதையும் செய்வார்கள். அதனால் அவர்களைத் தோற்கடிக்க தற்போதிலிருந்தே தயாராக இருங்கள் என முதல்வர் ஸ்டாலின் தனது கட்சி அணி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர் கூட்டம் இன்று நடைபெற்றது. 

இதில் பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் ராஜா, கனிமொழி உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. 

இக்கூட்டத்தில் அனைத்து அணி நிர்வாகிகளுடன் பேசிய முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார். அத்தோடு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள்.

அவர்களைத் தோற்கடிக்க திமுக நிர்வாகிகள் தற்போதிலிருந்தே தயாராக வேண்டும் என்றும், அணிகளில் வழங்கப்பட்டுள்ள பொறுப்பைப் பெருமையாகக் கருதிக்கொண்டு இருக்காமல், களத்தில் நின்று பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறாராம். 

Leave a Reply