அங்கன்வாடி குழந்தைகளுக்கு மதிய உணவில் வழங்கப்பட இருந்த அழுகிய முட்டைகள் … பெற்றோர்கள் அதிர்ச்சி…

அங்கன்வாடி குழந்தைகளுக்கு மதிய உணவில் வழங்கப்பட இருந்த அழுகிய முட்டைகள் … பெற்றோர்கள் அதிர்ச்சி…

வேடசந்தூர் ;

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா அய்யலூர் அருகே மணியக்காரன்பட்டியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். அங்கன்வாடிக்கு புதுக்கட்டிடம் கட்டப்பட்டு வருவதால் அருகில் உள்ள நாடக மேடையில் தற்காலிகமாக அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் வழங்கப்படவிருந்த, முட்டைகள் அழுகிய நிலையில் இருந்திருக்கின்றன. இதைப் பார்த்த அந்தப் பகுதி பொதுமக்களும், குழந்தைகளின் பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர்.

அதோடு, அழுகிய முட்டைகளைச் சமைத்து பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கவிருந்த அங்கன்வாடி பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குழந்தைகள் யாரும் சாப்பிடாததால் அசம்பாவிதம் ஏதுவும் நடக்காமல் தடுக்கபட்டது.

அய்யலூர் பகுதி முழுவதும் வழங்கப்பட்ட முட்டைகள் இவ்வாறு இருப்பதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். அழுகிய முட்டைகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் ஆய்வுசெய்து அங்கன்வாடி பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்களும், அந்தப் பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இதைத் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் விதமாக தங்கள் செல்போனில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு அழுகிய முட்டை வழங்கப்பட‌விருந்ததை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Reply