கோவில் திருவிழாவுக்கு அழைத்து வரப்பட்ட இரண்டு யானைகளுக்குள் கடும் மோதல்… அலறி அடித்து ஓடிய மக்கள் … பரபரப்பு வீடியோ…

பாலக்காடு;
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கிழக்கஞ்சேரி பகுதியில் உள்ள சிவன் கோவில் திருவிழாவுக்காக மூன்று யானைகள் வந்திருந்தன.
திருவிழா துவங்குவதற்கு முன்பாக யானைகளுக்கு நெற்றி பட்டம் போன்ற அலங்காரப் பொருட்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென்று இரண்டு யானைகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இதனால் திருவிழாவுக்கு வந்திருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து சிதறி ஓடினார்கள்.
மேலும் அங்கிருந்த இரு சக்கர வாகனங்களை யானைகள் துவம்சம் செய்தது.இதில் ஆறு இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு யானைகளை சமாதானம் செய்து பாகன்களால்கட்டி வைக்கப்பட்டது.
இரண்டு யானைகளுக்குள் மோதல் ஏற்பட்டு சண்டையிடும் காட்சிகள் அங்கிருந்த மக்களால் செல்போனில் வீடியோ எடுக்கப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வெளியானது . தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.