பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பணத்திற்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்களே முழு பொறுப்பு ….. தமிழக அரசு உத்தரவு…

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பணத்திற்கு அந்தந்த மாவட்ட      கலெக்டர்களே முழு பொறுப்பு …..    தமிழக அரசு உத்தரவு…

சென்னை;

பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்கப்பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகம் தொடர்பாக தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பொங்கல் பரிசு பொருட்கள் ரொக்கப்பணம் விநியோகம் 9ம் தேதிக்குப் பின் தொடங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 எக்காரணம் கொண்டும் தகுதியான பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது என்றும்,  அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply