கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலில் சீனிவாச பெருமாள் கோவிலில் கல்கருட சேவையில் திரளான பக்தர்கள்!!

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலில் சீனிவாச பெருமாள் கோவிலில் கல்கருட சேவையில் திரளான பக்தர்கள்!!

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விமரிசையாக நடக்கும் முக்கோடி தெப்ப திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று கல்கருட சேவை நடைபெற்றது.

தொடர்ந்து மாலை சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் கல்கருடபகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கருட பகவானை தோளில் சுமந்தவாறு வாகன மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கோவில் வளாகத்திற்குள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

கருட பகவான் பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தி வருவது போல் நடந்த கருட சேவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது. விழாவில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பு கோ. கிருஷ்ணகுமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Leave a Reply