சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன்!!

சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன்!!

2015-இல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகைகளில் ஒருவராக சேர்ந்தவர் அனுபமா. இவர் தனுஷ் நடித்த கொடி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். பல மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான ’18 பேஜஸ்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை அனுபமா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.


அதாவது, ரூ.60 லட்சம் சம்பளமாக வாங்கிய அனுபமா படங்களின் தொடர் வெற்றியால் ரூ.1 கோடியே 20 லட்சம் கேட்பதாகவும் இந்த தொகையை கொடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply