இசை வெளியீட்டு விழாவில் சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா !!

இசை வெளியீட்டு விழாவில் சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா !!

தமிழில் கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா, தற்போது விஜய்க்கு ஜோடியாக ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ராஷ்மிகா பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன் நடித்திருந்த ‘குட்பை’திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து ‘மிஷன் மஜ்னு’திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ராஷ்மிகா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கூறியதாவது, “தென்னிந்திய திரைப்படங்களில் மசாலா சாங்ஸ், ஐட்டம் பாடல்கள் போன்ற டான்ஸ் மோடில் தான் பாடல்கள் வருகின்றன. பாலிவுட்டில் தான் மெலோடியான ரொமாண்டிக் பாடல்கள் வருகின்றன. மிஷன் மஜ்னு படத்தில் அப்படி நான் எதிர்பார்த்த ரொமாண்டிக் பாடல் உள்ளது. அதனை கேட்க நான் ஆவலாக உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்மிகா நேரத்துக்கு தகுந்தாற்போல் பேசுவதாகவும், கொஞ்சம் கூட பொறுப்புணர்வே இல்லையென்றும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் ராஷ்மிகா கன்னட திரையுலகம் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply