‘பதான்’படத்தில் சில மாற்றங்களை செய்ய தணிக்கை குழு வலியுறுத்தல்!!

‘பதான்’படத்தில் சில மாற்றங்களை செய்ய தணிக்கை குழு வலியுறுத்தல்!!

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் “பதான்”. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் “பதான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்திலிருந்து சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘அழையா மழை’ பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் ஆடிய வீடியோ இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாகவும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில் ‘பதான்’படத்தில் சில மாற்றங்களை செய்ய தணிக்கை குழு வலியுறுத்தியுள்ளது. அதாவது, சர்ச்சைக்குரிய பாடல்கள் உட்பட சில மாற்றங்களை செய்து மீண்டும் சான்றிதழுக்கு சமர்ப்பிக்குமாறு தணிக்கை குழு பரிந்துரைத்துள்ளது.

Leave a Reply