ரிஷப் பண்ட் உத்தரகண்ட் மாநிலம் ரூர்க் பகுதி அருகே கார் விபத்தில் சிக்கி, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி…

ரிஷப் பண்ட் உத்தரகண்ட் மாநிலம் ரூர்க் பகுதி அருகே கார் விபத்தில் சிக்கி, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி…

இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் உத்தரகண்ட் மாநிலம் ரூர்க் பகுதி அருகே கார் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் (என்சிஏ) தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண் ட்விட்டரில் இதுகுறித்து கூறுகையில், பண்ட் ஆபத்தில் இருந்து வெளியேறிவிட்டார். ஆனால் அவரது காயம் எந்த அளவிற்கு உள்ளது என்பது இன்னும் தெரியவில்லை.

இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில், பண்ட் டெல்லிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

25 வயதான பண்ட் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply