பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட் நியூசிலாந்து வெற்றி பெறுமா?

பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட் நியூசிலாந்து வெற்றி பெறுமா?

கராச்சி:

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 438 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 612 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.

174 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி நேற்றைய 4-ம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 77 ரன் எடுத்திருந்தது.

கைவசம் 8 விக்கெட் உள்ள நிலையில் இன்று 5-வது நாள் ஆட்டத்தை தொடங்கியது பாகிஸ்தான். அந்த அணி டிரா செய்யும் நோக்கில் ஆடியது. நௌமன் அலி மற்றும் பாபர் அசாம் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

பாகிஸ்தானின் எஞ்சிய 6 விக்கெட்டுகளை கைப்பற்ற நியூசிலாந்து முயற்சித்து வருகிறது. இதனால் பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட் உள்ளது.

Leave a Reply