சாலை விபத்தில் சிக்கி வலியால் துடித்து கொண்டிருந்தவரை உடனே மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தலைமைச் செயலாளர் .. மனிதாபிமானத்துக்கு குவியும் பாராட்டு.

சாலை விபத்தில் சிக்கி வலியால் துடித்து கொண்டிருந்தவரை உடனே மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த  தலைமைச் செயலாளர் .. மனிதாபிமானத்துக்கு குவியும் பாராட்டு.

சென்னை;

சென்னையில் இன்று காலை சுமார் பத்து மணியளவில் நேப்பியர் பாலத்தின் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் எதிர்பாராத விதமாக ஆட்டோவில் மோதி விபத்தில் சிக்கினார்.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கீழே விழுந்ததில் அவரது கால் முறிந்தது. இதனால் ரத்தம் வெளியேறி வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு விபத்தைக் கண்டு வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி, காவல்துறைக்கும் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் கொடுத்தார்.

ஆம்புலன்ஸ் வந்ததும் உடனடியாக அந்த நபர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தலைமை செயலாளரால் அனுப்பி வைக்கப்பட்டார். விபத்தில் சிக்கிய அந்த நபர் வேளச்சேரியைச் சேர்ந்த குமரேசன் என்பது தெரியவந்தது.

பணி நிமித்தமாக பாரிஸ் கார்னர் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக தெரியவந்தது. அண்ணா சதுக்கம் போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் பல தரப்பிலிருந்து தலைமைச் செயலாளருக்கு பாராட்டுகள் குவிந்து வண்ணம் இருக்கிறது .

Leave a Reply