கொரானா காலத்தில் தனது கல்லாவை நிரப்பிய கல்லாப்பெட்டி சிங்காரம் தான் எடப்பாடி…. தமிழக அமைச்சர் கடும் விமர்சனம் ..

சென்னை:
திமுக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய எம்ஆர்கே பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்தார்.
சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புனித தோமையர்மலை ஒன்றிய திமுக சார்பில் பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடவாக்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வேளாண்துறை அமைச்சர் M.R.K.பன்னீர்செல்வம், கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய வேளாண்துறை அமைச்சர் M.R.K.பன்னீர்செல்வம், கல்லாபெட்டி சிங்காரம் என எடப்பாடியை விமர்சித்தார்..

கொரோனா பரவிய போது அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று அதிமுக அரசுக்குத் தெரியவில்லை என்று விமர்சித்த அவர், அதிமுக முறையான நடவடிக்கை எடுக்கத் தவறியதால் கொரோனா காலத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர் என்றும் சாடினார்.
மேலும், எடப்பாடி முதல்வராக இருந்தபோது கல்லாபெட்டியை நிரப்ப நெடுஞ்சாலைத் துறையையும் பொதுப்பணித் துறையையும் வைத்துக்கொண்டார் என்றும் விமர்சித்தார். “கொரோனா காலத்தில் ரூபாய் 20,000 கோடியை டெண்டர் விட்டு கல்லா கட்டியவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி முன்பு எப்படி இருந்தார் என்பது அனைவருக்குமே தெரியும். சாதாரண அமைச்சராகவே இருந்தார். அப்படியிருந்த எடப்பாடி பழனிசாமி சசிகலா காலில் விழுந்து தான் முதல்வராகவே ஆனார். ஆனால், அதன் பிறகு, இதுவரை சசிகலாவைச் சந்திக்கக் கூட இல்லை. அவ்வளவு ஏன் சசிகலாவைக் கட்சியை விட்டும் நீக்கிவிட்டார்.
இப்படிப்பட்ட நன்றிகெட்ட துரோகிகளை நாட்டை விட்டுத் துரத்த வேண்டும்” என்று அவர் கடுமையாகச் சாடி பேசினார்.