127 கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்கள் மற்றும் சொத்துகள் முடக்கம்.. தமிழக காவல்துறை அதிரடி …

127 கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்கள் மற்றும் சொத்துகள் முடக்கம்.. தமிழக காவல்துறை அதிரடி …

சென்னை;

கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க முதலமைச்சர் அவர்கள் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, கஞ்சா வேட்டை , கஞ்சா வேட்டை 2.0 நடந்து முடிந்த நிலையில் 12:12.2022 முதல் 30.12.2022 தமிழ்நாடு முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 நடைபெற்றுவருகிறது.

கடந்த 19 நாள்களில், 1811 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 184,71,085 ரூபாய் மதிப்புள்ள, சுமார் 1610 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் பயன்படுத்திய 159 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கஞ்சா மொத்த வியாபாரிகளின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0- இல் இதுவரை கஞ்சா வியாபாரிகளின் 127 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, 8,83,934 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை வருடங்களாக போதைப் பொருள்களுக்கு எதிரான காவல்துறை தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் விளைவாக 282 காவல் நிலைய எல்லைகளில் பெரும்பாலும் போதைப்பொருள்களின் விற்பனை அறவே தடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

மேற்கண்ட காவல் நிலையங்களில் கடந்த ஆறு மாதத்தில் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகும் போதைப் பொருள் விற்பனை தொடர்பான வழக்குகள் பதிவாகவில்லை என்றும், இது இன்னும் தொடர்ந்து அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் போதைப் பொருட்கள் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது. 

அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையாளர்களும், கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளையும், சட்ட விரோதமாக வாங்கிக் குவித்த சொத்துக்களையும் முடக்கி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply