தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறையின் ட்விட்டர் பக்கத்தை முடக்கிய ஹேக்கர்கள்…

தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறையின் ட்விட்டர் பக்கத்தை முடக்கிய ஹேக்கர்கள்…

சென்னை :

புத்தாண்டில் அதிர்ச்சி செய்தியாக தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை வெளியிடும் தமிழக செய்தி தொடர்பு துறையின் ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே சமீபகாலமாகவே அரசியல் பிரமுகர்கள், பிரபலங்களின் சமூக வலைதள பக்கங்களான ட்விட்டர், பேஸ்புக் ஆகியவை ஹேக் செய்யப்பட்டு, தவறான தகவல்கள் பதிவுச் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட பிரதமர் அலுவலக ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு பின்னர் பலத்த போராட்டங்களுக்குப் பின் அது மீட்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பு நிறுவனமான தமிழ்நாடு அரசு செய்தி தொடர்பு துறை ஹேக் செய்யப்பட்டுள்ளது.

நள்ளிரவு ஒன்றரை மணியிலிருந்து அந்த ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து புகைப்படத்துடன் “டெஸ்லா பிக் கிரிப்டோ ஈவன்ட்” என்ற பெயரில் விளம்பரங்கள் வெளியாகின.

இதனால் முதலில் அந்தப் பக்கத்தை பின் தொடர்பவர்களும் அரசு அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்த நிலையில் அதற்குப் பிறகுதான் இது ஹேக்கர்களின் கைவரிசை என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் பக்கத்தினை மீட்கும் முயற்சியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அடுத்தடுத்து தமிழக அரசை குறி வைத்து ஹேக்கர்கள் ட்விட்டர் பக்கங்களை முடக்குவதும் அதற்குப் பிறகு அந்தப் பக்கங்களை மீட்டெடுப்பதும் வழக்கமாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply