நாங்க அரசியல்வாதிகள்.. எலெக்சன் வரைக்கும்தான் மக்கள கையெடுத்து கும்பிடுவோம்..அப்புறம் கண்டுக்கவே மாட்டோம் …. தமிழக அமைச்சர் பேச்சால் பரபரப்பு…

நாங்க அரசியல்வாதிகள்.. எலெக்சன் வரைக்கும்தான் மக்கள கையெடுத்து கும்பிடுவோம்..அப்புறம் கண்டுக்கவே மாட்டோம் …. தமிழக அமைச்சர் பேச்சால் பரபரப்பு…

கிருஷ்ணகிரி:

 தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு நாங்கள் யாரையெல்லாம் பார்க்கிறோமோ அவர்களை எல்லாம் கும்பிடுவோம், அதன் பிறகு எங்களுக்கு கண்ணே தெரியாது என அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர் பயனாளிகளுக்கு1.29 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்கள் உதவி வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.

இந்த விழாவில் அமைச்சர் காந்தி பேசுகையில்;

 நாங்கள் எல்லாம் அரசியல்வாதிகள். தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு பார்ப்பவர்களை எல்லாம் பார்த்து கையெடுத்து கும்பிடுவோம். அப்புறம் எங்களுக்கு கண்ணே தெரியாது.

தூக்கத்தில் தூக்கத்தில் மனைவி கை வைத்தாலும் அவர்களையும் கும்பிடுவோம். ஆனால் வெற்றி பெற்றுவிட்டால் எங்களுக்கு கண்ணே தெரியாது. உங்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என மக்களாகிய நீங்கள்தான் யோசித்து ஓட்டு போட வேண்டும். அப்போதுதான் அரசியல்வாதிகளுக்கு பயம் வரும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும் என்றார்.

அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை இப்படி பொது வெளியில் அமைச்சர் சொல்லலாமா என்று கட்சிகாரர்கள் முனுமுனுத்த வாறு சென்றனர் .

Leave a Reply