பாம்பைப் பிடித்து விளையாடி புத்தாண்டு கொண்டாடிய வாலிபர்… இறுதியில் நடந்த சோகம் …

பாம்பைப் பிடித்து விளையாடி புத்தாண்டு கொண்டாடிய வாலிபர்… இறுதியில் நடந்த சோகம் …

திருப்பாதிரிப்புலியூர் ;

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். வாலிபரான இவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து புத்தாண்டை மகிழ்ச்சியாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவர்களது குறுக்கே சென்ற பாம்பை மணிகண்டன் பிடித்துள்ளார். பிறகு இது உங்களுக்கான புத்தாண்டு பரிசு என நண்பர்கள் மீது பாம்பைத் தூக்கிப் போட முயன்றபோது திடீரென்று பாம்பு மணிகண்டனை கொத்தியதில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை மீட்டு உடனே அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மணிகண்டன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாம்பு கடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply