திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் 5 நாள் வருடாந்திர தெப்போற்சவம் தொடக்கம்!!

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில்            5 நாள் வருடாந்திர தெப்போற்சவம் தொடக்கம்!!

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் 5 நாள் வருடாந்திர தெப்போற்சவம் நேற்று தொடங்கியது. அதையொட்டி முதல் நாளான நேற்று இரவு உற்சவர்களான விநாயகர், சந்திரசேகரர் கபிலத்தீர்த்த குளத்தில் மிதந்த தெப்பத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கபிலத்தீர்த்த கரைகளில் அமர்ந்திருந்த திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தெப்போற்சவத்தில் கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி பார்த்தசாரதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply