புத்தாண்டு கொண்டாட்டம் ; கஞ்சா போதையில்  இரும்புக்கம்பியால் அடித்து பெண்ணை கொலை செய்த ”திமுக பிரமுகரின் மகன்”.. அதிர்ச்சி சம்பவம் ..

புத்தாண்டு கொண்டாட்டம் ; கஞ்சா போதையில்  இரும்புக்கம்பியால் அடித்து பெண்ணை கொலை செய்த ”திமுக பிரமுகரின் மகன்”.. அதிர்ச்சி சம்பவம் ..

திருவள்ளூர் ;

திருவள்ளூர் அருகே திமுக ஒன்றிய கழக செயலாளர் மகன் கஞ்சா மது போதையில்
இரும்பு கம்பியால் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகை பேர் கிராமத்தைச் சேர்ந்த திமுக ஒன்றிய கழகச் செயலாளரான சக்திவேல். இவரது மகன் விஷால் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் காரணமாக கஞ்சா மற்றும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அருகில் உள்ள அவரது பெரியப்பா மறைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திராவிட பாலு என்பவர் வீட்டில் அவரது மனைவி செல்வி, மகன் முருகன், மருமகள் ரம்யா, பேரன் கருணாநிதி ஆகியோருடன் இருந்தபோது, ஏற்கனவே இருந்த குடும்ப பிரச்சனை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் இரும்பு கம்பியை கொண்டு நால்வரையும் விஷால் சராமாரியாக தாக்கினார் .. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில், ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். இரத்த வெள்ளத்தில் இருந்த மற்ற மூவரையும் பொதுமக்கள் மீட்டு வேல்ஸ் தனியார் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இரும்பு கம்பியால் தாக்கி ரம்யாவை கொன்றுவிட்டு தப்பியோடிய தனியார் கல்லூரி மாணவன் திமுக ஒன்றிய கழக செயலாளர் மகனை பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Leave a Reply