புத்தாண்டை முன்னிட்டு ரஜினி வீட்டின் முன்பு காத்திருந்த ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!!

புத்தாண்டை முன்னிட்டு ரஜினி வீட்டின் முன்பு காத்திருந்த ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!!

உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு தினத்தை கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், ஒருவருக்கொருவர் வாழ்த்து பகிர்ந்தும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினியின் ரசிகர்கள் புத்தாண்டை முன்னிட்டு அவரின் வீட்டின் முன்பு குவிந்து ரஜினியின் வாழ்த்துக்காக காத்திருந்தனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சென்னையில் தனது வீட்டின் முன்பு குவிந்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கையசைத்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply