மாடர்ன் லுக்கில் அசத்தலாக போஸ் கொடுத்த அதிதி!!

மாடர்ன் லுக்கில் அசத்தலாக போஸ் கொடுத்த அதிதி!!

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என எல்லாவற்றிலும் வாரிசு நடிகர், நடிகைகள் எப்போதும் உண்டு. அதில் ஒருவர்தான் அதிதி. இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஆவார்.

இவரை மருத்துவராக்க வேண்டும் என ஷங்கர் ஆசைப்பட்டு எம்.பி.பி.எஸ் படிக்க வைத்தார். ஆனால், மருத்துவம் படித்துவிட்டு நான் நடிகையாகத்தான் ஆவேன் என அடம்பிடித்து நடிகையாகியுள்ளார் அதிதி.

கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கிய விருமன் திரைப்படத்தில்தான் இவர் அறிமுகமானார். அடுத்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘மாவீரன்’ படத்திலும் நடிக்கவுள்ளார்.

ஒருபக்கம், சக நடிகைளை போல அதிதியும் விதவிதமான உடைகளில் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

இந்நிலையில், வழக்கமாக தாவணி பாவாடையில் பவுசு காட்டும் அதிதி திடீரென மாடர்ன் லுக்கில் அசத்தலாக போஸ் கொடுத்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

Leave a Reply