கஷ்டப்படற கட்சிகாரங்களுக்கு  ரூ.100 கூட உங்க பையனால தர முடியாதா… ப.சிதம்பரத்திடம் வாக்குவாதம் செய்த தொண்டர்கள் ..

கஷ்டப்படற கட்சிகாரங்களுக்கு  ரூ.100 கூட உங்க பையனால தர முடியாதா… ப.சிதம்பரத்திடம் வாக்குவாதம் செய்த தொண்டர்கள் ..

மானாமதுரை;

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது பல்வேறு விசயங்கள் குறித்து கட்சியினர் விவாதித்துக் கொண்டிருந்தனர். ‘சில நாட்கள் முன் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் எம்.பி., கலந்து கொண்ட கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு, சில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு முறையாக அழைப்பு கொடுக்கவில்லை’ என்று சிலர் குற்றச்சாட்டு முன் வைத்தனர்.

ப.சிதம்பரத்திடம் அவரது மகன் பற்றி புகார் தெரிவித்ததற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க, கட்சி நிர்வாகிகளுக்கு இடையே இரு பிரிவாக பிரிந்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த பிரச்னை ஓய்வதற்குள் அடுத்த பிரச்னையை காங்கிரஸ் தரப்பிலிருந்து எழுப்பப்பட்டது.

அதில் ஒரு நிர்வாகி பேசும்பொழுது, ‘கடந்த தீபாவளியை முன்னிட்டு திமுகவில் 27 வார்டுகளிலும் திமுக நிர்வாகிகளுக்கு ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல நமது கட்சியில் வறுமையில் இருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கு ஆயிரம் ரூபாய் கூட வேண்டாம், ஒரு 100 ரூபாய் கூட கொடுக்க எம்.பி கார்த்திக் சிதம்பரத்தால் முடியாதா?’ சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த ப.சிதம்பரம், ‘கண்டிப்பாக முடியும், அதற்க்கு கொள்ளையடித்தால் மட்டுமே முடியும்,’ என்று பதிலளி்த்தார். மேலும், ‘வறுமையை போக்குவது என்பது தவறு செய்தால் மட்டுமே முடியும், அப்போ என்னை தவறு செய்யச் சொல்கிறீர்களா?’ என நிர்வாகளிடம் கொந்தளித்தார் ப.சிதம்பரம் .

இதை தொடர்ந்து வாக்குவாதம் முற்றியது. அப்போது கருத்து தெரிவித்த ப.சிதம்பரம், ‘ மானாமதுரை காங்கிரஸ் கட்சி உள்ளேயே முன்று , நான்கு கோஷ்டிகளாக இருக்கின்றீர்கள்’ என குற்றம்சாட்டினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன்பே காங்கிரஸ் கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply