அணு ஆயுத பலம் மேலும் வலுப்படுத்தப்படும் : வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் அதிரடி முடிவு!

அணு ஆயுத பலம் மேலும் வலுப்படுத்தப்படும் : வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் அதிரடி முடிவு!

அணு ஆயுத பலம் மேலும் வலுப்படுத்தப்படும் என வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் தெரிவித்துள்ளார். ஆளும் உழைப்பாளர் கட்சியின் கூட்டத்தில் பேசிய அவர், “அமெரிக்க, தென் கொரியா நாடுகளின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில் நாட்டின் அணு ஆயுத பலம் வலுப்படுத்தப்படும்” என்றார்.

ராணுவ பலத்தை அதிகரிக்க அழைப்பு விடுத்த அவர், “அமெரிக்காவும் பிற விரோத சக்திகளும் வட கொரியாவை தனிமைப்படுத்தி, திணறடித்தன. மனித வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்படி நிகழ்ந்துள்ளது.

விரைவான அணுசக்தி எதிர்ப்புத் தாக்குதலை மேற்கொள்ளும் திறன் கொண்ட புதிய ஐசிபிஎம் அமைப்பை உருவாக்க நான் உத்தரவிட்டுள்ளேன். வட கொரியா தனது நீண்ட தூர ஏவுகணைகளை விரைவாக நிலைநிறுத்துவதற்கு மையமாக இருக்கும் திட-எரிபொருள் ராக்கெட் இயந்திரத்தை சோதனை செய்துள்ளது.

வட கொரியாவின் விண்வெளி நிறுவனம் தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளையும் கூடிய விரைவில் விண்ணில் செலுத்தும். தாக்குதல் நடவடிக்கைக்காக அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம்” என்றார்.

கட்சி கூட்டத்தின் கடைசி நாளான நேற்று கிம் இப்படி பேசியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம், அணு ஆயுத தாக்குதல்களை நடத்துவதற்கு அனுமதியளிக்கும் புதிய சட்டத்தை வடகொரியா இயற்றியது. அந்த நேரத்தில், தனது அணு ஆயுதங்களைக் கைவிடப்போவதில்லை என்றும் கிம் அறிவித்திருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2:50 மணியளவில், தலைநகர் பகுதியில் இருந்து குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை வடகொரிய ஏவியது என தென்கொரியா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள கடலில் விழும் முன் சுமார் 249 மைல் தூரம் சென்றதாக கூறப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, பொருளாதாரத் தடைகளை பொருட்படுத்தாத வண்ணம், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை முழு வீச்சில் ஏவி வட கொரியா ஜனவரி முதல் சோதனை நடத்தி வருகிறது.

சர்வதேச அளவில் தனிமைப்பட்டிருக்கும் வடகொரியா ஏழாவது அணு சோதனையை நடத்த தயாராகி வருவதாகவும் அமெரிக்க மற்றும் தென்கொரிய அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.

தென் கொரிய மற்றும் அமெரிக்க துருப்புக்கள் தங்கள் வருடாந்திர ஒருங்கிணைந்த ராணுவ பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்னதாக பூர்வாங்க பயிற்சிகளைத் தொடங்கினர்.

இந்த ராணுவ பயற்சி, வட கொரியாவை ஆத்திரமூட்டின. இது அவர்கள் படையெடுப்புக்கான ஒத்திகையாகக் கருதினர். ஏவுகணை சோதனையின் காரணமாக அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.

முன்னதாக, பதற்றத்தை தணிக்கும் வகையில், கடந்த 2018இல் சிங்கப்பூரில் நடைபெற்ற உச்ச மாநாட்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டனர்.
…..

Leave a Reply