மெக்சிகோ நாட்டின் சிவாடட் யுரேஸ் பகுதியில் உள்ள சிறையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் உயிரிழப்பு!!

மெக்சிகோ நாட்டின் சிவாடட் யுரேஸ் பகுதியில் உள்ள சிறையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் உயிரிழப்பு!!

மெக்சிகோ நாட்டின் சியுடாட் ஜுவாரெஸில் உள்ள சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் காரில் வந்த மர்ம நபர்கள் சிறைச்சாலைக்குள் புகுந்தனர். பின்னர், மர்ம நபர்கள் சிறைச்சாலையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் பத்து காவலர்கள் மற்றும் நான்கு கைதிகள் உயிரிழந்துள்ளளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது. “ ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணியளவில் மர்ம நபர்கள் சிறைச்சாலையில் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்ததாகவும், 13 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவத்தால் சிறையில் இருந்து கைதிகள் 24 பேர் தப்பியோடிவிட்டதாகவும் தெரிவித்தனர். அவர்களை மீட்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மெக்சிகோவில் உள்ள ஒரு சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 2 கைதிகள் உயிரிழந்துள்ளனர். மர்ம நபர்கள் மெக்சிகோவின் ஜுவாரெஸ் தெருவில் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அப்பகுதியில் ஒருவருக்கொருவர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பின்னர் மர்ம நபர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் துப்பாக்கி சூடு நடத்தினர் . அதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

மெக்சிகோவின் ஜுவாரெஸ் போன்ற இடங்களில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல் வெடிக்கின்றன. இதனால் அப்பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. தற்போது மெக்சிக்கோ சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் 6 பேரில் 2 பேரை சம்பவ இடத்திலேயே போலீசார் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Leave a Reply